Friday, 21 October 2011 0 comments

உன் இதழ்களில்
என்னவளே உன் இதழ்கள் பத்திரம்
உன் குரலின் இனிமையை
எங்கிருந்தோ ஒட்டு கேட்ட
வண்டுக்கள்
என்னை நச்சரிக்கிறது
...
உன் முகவரியை கேட்டுஅவைகளும்உன் இதழ்களில்இனிமையை சுவைக்க வேண்டுமாம்…0 comments

கந்தகக் கனவுகள்


பிரேம லதா

கந்தகக் கனவுகள்

= = = = = = = = = =

விதிப்புயலால்

வேரோடு சாய்க்கப்பட்ட

வாழைக் க...
ன்றுகள்

நாங்கள்!


கனவினில் கூட

கல்வியைக் காணமுடியவில்லை

கந்தக மணத்தில் எங்கள்

கனவுகள் களவாடப்படுகின்றன!

வான்நோக்கி

கையுயர்த்தித் தொழுகின்ற

வாய்ப்பும் வரவில்லை!

வெடித்துச் சிதறுகிற

நெருப்புத்துளிகள் யாவும்

எங்கள்

சிவகாசிச் சிறுவர்களின்

வியர்வைத்துளிகளாய்....

பிஞ்சுவிரல்கள் யாவும்

நஞ்சுகள் குடிகொள்ள

விழிகளில் வழியும்

ஈரத்தால் நஞ்சுகள்

நமுத்தே போகின்றன!

வாழ்வை இழந்து

வசதி பொறுக்குகின்ற

இளம் சருகுகளாய்

சாய்கின்றோம்.....

எரிந்து கிடக்கும்

காகிதக் குப்பைகளில்

கிழிந்து கிடக்கும்

எங்கள் முகங்கள்!

எரிந்து கருகும்

மத்தாப்புகளின் வெளிச்சத்தில்

எரிந்து கொண்டிருக்கிறது

எங்கள்வீட்டு அடுப்புகள்!

அவதாரம் எடுத்தால்தான்

ஆண்டவன் கையில்

சங்குச்சக்கரம் - ஆனால்

சங்குச்சக்கரத்தை

சுற்றுவதற்கே நாங்கள்

அவதாரம் எடுத்திருக்கின்றோம்....!!

மற்றவர்கள்

மத்தாப்பு எரித்து

தீபாவளியை தீர்(ய்)க்கின்றனர்...!!

நாங்களோ

மத்தாப்பை திரித்து

எங்களை தீய்(ர்)க்கின்றோம்...!!

கந்தகத்தின் மூலம்

கண்ணியமாய்

காலனுக்குத் தூதனுப்பி

கவுரவமாய் கண்மூடியவர்கள்

நாங்கள்..!!

ஆண்டுக்கு ஒருமுறை

வீதிகளில் விசப்புகையும்

வெளிச்சமும், சத்தமும்.....

என்றால்

ஆண்டாண்டும் எங்களின்

விழிகளில் விசப்புகை

வாழ்விலோ இருள்

இதயத்திலோ இரைச்சல்!

இங்கு

எங்களுக்கான

விதி கண்மூடிதவமிருக்கிறது!

விழித்தால் விடியல்....
!!


0 comments

வசிக்கிறேன்...வாழ்கிறேன்!

பிரேம லதாபேசாத காதலும், வீசாத தென்றலும்

வீண்தானே.......இதை சொல்லி, இதை எடுத்துக்காட்டி


இதை நினைவுபடுத்தி, இதை தெளிவுபடுத்தி

...
எழுதத் தோன்றும் எழுதாதவரை!

பேசத் தூண்டும் பேசாதவரை!இந்த ஒவ்வொரு எழுத்துக்களிலும் - நீ

உயிராய் உணர்வாய் வசிக்கிறாய் - உன்

இதழ்கள் வாசிப்பதற்காகவே - நான்

வசிக்கிறேன்...வாழ்கிறேன்!எந்தப் புள்ளியில் என்னை

முழுவதுமாய் தொலைத்தேன்

என்னை உடைத்தேன்

என்பதெல்லாம் மறந்து போய்என்றோ பெய்த மழையில்

முளைக்கின்ற விதையைப் போல்

எனக்குள் எங்கோ இருந்து

காதலாய் முகிழ்த்தவன் நீதானே...
Wednesday, 19 October 2011 0 comments

நீ என்னோடு


ஆனந்த் கெ.ம
நீ வருகிறாய் என்று


என்னை ஏமாற்றிய நாட்களில்


ஏமாந்து போனது


நான் மட்டும் அல்ல


இந்த கடற்கறையில்


...
நீ என்னோடு


நடைபயிலும் நேரங்களில்


நமக்கு தெரியாமல்


உந்தன் பாதசுவடுகளை


திருடி செல்லும்


அலைகளும் கூட…0 comments

என் விழி எதிரே....கவிஞர் கவிதாசன்மான் விழி..!மயங்கினேன் அந்த
மலர் விழியை கண்டு...
விழி மூடாமல் விழித்திருந்தேன்
அந்த வேல்விழியை காண..
அவள் விழிகளை கண்டு
...
விழி மூடிக்கொள்ளிறது சூரியன்...என் விழிகளுக்கும் விருந்து தரும்வெண்ணிலவு இப்போ பகலிலும்என் விழி எதிரே....எனை வருவிடச் செல்லும்வாடைக்காற்றாகவும்எனை சுற்றி சுழன்று வரும் சுழல் காற்றும்எனை சுவாசிக்கக வைக்கும்தென்றல் காற்றும் நீயாகி நீயாகிவள்ளியே வள்ளி உன் கூந்தலில்இருக்கும்மல்லிகைப் பூவைவருடி தடவிட வா வா உன் மவுன மொழியால்அழைத்து விடும் இளைய நிலவே

0 comments

என் ஜீவனே....


பிரேம லதா
என் ஜீவனே....

அள்ளி வீசிய உன் அன்பில்


புண்ணான நெஞ்சமும் பூவானது

...


கல் அடிபட்ட குளமாய்

இறந்தகால நினைவலைகள்இன்றுஉன் இரத்தின சொல்லால்

தெளிந்த நீரோடையாய்

நெகிழ்ச்சியான நிகழ்வுகள்உன் காதலின் தாக்கத்தால்

மேனியெங்கும் ஆயிரம் மின்னல்கள்உன் அலைபேசியின் சத்தத்தால்

இதயமெங்கும் ஆலயமணியின் ஓசைகள்உன் பரிவான பார்வையால்

மூங்கில் ஒன்று நாணலானதுஉன் வருகையால் இனமறியா பெண்மை

முகமறியாமல் மயங்கி நின்றதுஉன் கனவில் நான் இல்லையென்றால்

தொலைந்து போகும் எனது தூய இரவுஉன் மொழியில் நான் இல்லையென்றால்

இறந்து போகுமே எனது உறவு ...அன்பே...இசை இல்லையென்றால் சங்கீதம் சிறப்பதில்லை

நீ இல்லையென்றால் நானும் சிரிப்பதில்லைஊணும் உயிரும் உருகி உனக்காகவே

விளக்கேற்றி விடியும்வரை விழித்திருப்பேன்உன் கோயிலின் ரதமாக இருப்பேனன்றி

வீதியில் இறங்க மாட்டேன்...
0 comments

உன் உயிர்!! பூ!!

கவிஞர் கவிதாசன்


வெண்ணிலவே வானத்தில் ஒட்டியவெண்ணிலவேசெவ் வானத்தை கட்டித்தழுவிதேயாமல் காயாமல் களிப்போடுஅசைவது !!போலும்...
அன்பே உன்னைத் நான் தழுவிடும்போது


உன் உயிர்!! பூ!!


உனக்குள் மலர்ந்திடுதே மலர்ந்திடுதே


எனக்காகவே உனில் தான் மலர்ந்திடுதே


!!!!!!!!!!!!! !!
Monday, 17 October 2011 0 comments

என்னவளே


ஆனந்த் கெ,மஎன்னவளே என்னிடம்ஒரு கவிதை சொல்ல சொன்னாள்நானோ எதைப்பற்றி கூற என்றேன்அவளை பற்றியே கூறு என்றாள்நானோ கவிதையை கூறமுடியாதுஎழுதுகிறேன் என்றேன் சரி என்றாள்


என் பேனா கவிபாட ஆரம்பித்தது இப்படி


பேசும் கவிதை உனது விழிகள்


சிக்கலான கவிதை உனது கூந்தல்


அபாய கவிதை உனது புருவம்


மௌனமான கவிதை உனது புன்னகை


ஆச்சரிய கவிதை உனது சிரிப்பு


அசைந்தாடும் கவிதை உனது காதணி


கூர்மையான கவிதை உனது மூக்கு


அடுக்கி வைத்த கவிதை உனது பற்கள்


நட்சத்திர கவிதை உனது முகபரு


நிலம் தீண்டும் கவிதை உனது பாதம்


இசைபாடும் கவிதை உனது கொழசு


எழுதி முடிப்பதற்கு முன்பே


பரித்துக்கொண்டாள்


இன்னும் முடிக்கவில்லை என்றேன்


அதை காதில் வாங்காமலே


படித்து முடித்த பிறகு


சிரித்துக்கொண்டே கூறினாள்


கடைசிவரியை அவள் கூற


எனை எழுத சொல்லி


உன் காதல்


ஒரு ஆச்சரியமான கவிதை என்று


அப்போது தான் அறிந்து கொண்டேன்


ஒரு கவிதைக்ககு கூட


கவிதை எழுத தெரியும் என்று…0 comments

மாறாத உண்மைபிரேம லதா
என் காதலின் கவிகளைஅப்புறப்படுத்திய உன்னிடம்கனவுகள் பலிக்க யாசித்தேன்யாசித்த என்னைஒருமுறையேனும் - உன்யோசிப்பிற்குள்


கொண்டு வருவதேயில்லை....

கணநேரம் கடந்த போதும்


தீராத எனது அழைப்பை - நீ


தீண்டாமலேயே தீர்க்கின்றாய்...


சேவகம் செய்யாத - எனது


அழைபேசியை நோக்கியே


என் பார்வையும் அலைகிறது...


எனது வசந்த வார்த்தைகளை


வம்பாய் மறுக்கின்றாய்!

அன்பை நடவு செய்து


அறுவடை செய்யவே - நான்


நீர்ப்பாசனம் விடுகின்றேன்


என் கண்ணீரைக் கொண்டு!


நீயோ விதைப்பதற்கு முன்பே


அரும்பைக் கிள்ள


ஆயத்தமாகின்றாய்...

பல கவி படைத்தவனிற்கு


பாவியிவளின்


பாசம் புரியவில்லை


என்


காகிதக் கிறுக்கல்களை


கவியாய்க் காண்கின்றன


ஆயிரம் கண்கள்!


அக்கண்களுக்கு தெரியாது


உன்


பார்வைக்காய் தவமிருந்து


கசங்கிக் கிடந்தாலும்


காதலைச் சுமந்தபடி


நிற்கும் காகிதமல்ல அது


காவியம் என்று....


எது எப்படியோ - நீ


என்


நேசத்திற்குரியவன்


என்ற நிலைமாறி - நீ


என்


சுவாசத்திற்குரியவனாகிவிட்டாய்


என்பது மட்டும் முற்றிலும்


மாறாத உண்மை.....0 comments

உன் காதலும் அப்படித்தானோ...பிரேம லதாவிட்டு விட்டுத் தொடர்வதில்....

விட்டு விட்டுத்

தொடர்வதில்

நீயும் என் தந்தையும்

ஒன்றுடா...

என் காதலை

எப்படி விட்டு விட்டு

ஏற்கிறாயோ
அப்படியே

சிறுமியாய் இருக்கும்

காலச் சூழ்நிலையில்

தந்தையின் கைவிரல்பிடித்து

நடக்கையில்

எதிர்திசையில் வரும்

வணக்கங்களுக்கு

பதில் வணக்கம் சொல்வதிலேயே

என் தந்தையின் கைவிரல்கள்

எனக்கு கிடைக்காமலேயே

போய்விடும்....

உன் காதலும் அப்படித்தானோ...

0 comments

என் மனக்கண்ணில்ஓலைக்குடிசைகயிற்றுக்கட்டில்களிச்சேறுஏர் கலப்பைஎருமை மாடுபானைத்தண்ணீர்விறகு அடுப்புஅம்மிக்கல்உரல்உழக்கைஇவைப்போல் இன்னும் பலஎண்ணி பார்க்கையிலேஎன் மனக்கண்ணில்வந்து மறையும் பிம்பங்கள்இருந்தாலும் என்னுள்ஏதோவோரு பயம்என் மனக்கண்ணில்வந்து போகும் பிம்பங்கள்என் மகன் கண்ணில்வந்து போகுமா என்று…

Saturday, 15 October 2011 0 comments

ஜாக்கிரதை நண்பர்களே


ஆனந்த் கெ.மநிஜ வாழ்க்கையில் கூட வேஷம் போடும் நபர்கள்

இதோ இன்றும்

மீண்டும் வேடமேற்று நடிக்க தயாராகிவிட்டார்கள்

அதனால் ஜாக்கிரதை நண்பர்களேஅவர்ளின் இப்போதைய புன்னகை


...
எப்போதுமே மர்ம புன்னகை தான்

அதனால் ஜாக்கிரதை நண்பர்களேஇத்தனைகாலம் தொலைந்து போன சொந்தங்களை


எல்லாம்


இன்று மட்டும் நினைவில் வைத்து நாளையே மறந்து


விடும்

ஞாபக மறதி அதிகம் கொண்டவர்கள்

அதனால் ஜாக்கிரதை நண்பர்களேஇன்று எல்லோரும் தர்ம பிரபுக்கள் தான்

நாளையே அவர்கள் உங்களின் பாக்கெட்டில் உள்ள

பணத்தினை மட்டும் உறிஞ்சும் அட்டை பூச்சிக்கள்

அதனால் ஜாக்கிரதை நண்பர்களேஇன்று உங்கள் காலினை பிடிப்பவர்கள்

நாளை உங்களை அவர்களது காலில் விழ வைக்க

நன்று அறிந்தவர்கள்

அதனால் ஜாக்கிரதை நண்பர்களே….சிநதியுங்கள் தோழர்களே

நீங்கள் அழுத்த போகிறீர்களோ இல்லை குத்த

போகிறீர்களோ

சிந்தியுங்க ள் அது அவர்களின் தலையெழுத்து

மட்டுமல்ல

உங்களுடையதும் கூட

அதனால் ஜாக்கிரதை நண்பர்களே…
0 comments

விடியல்


விண்மீன்கள் விட்டுச்சென்ற விடியல்
விழிகளோ நெருப்புக் குளியலாய்...
நெஞ்சமோ தணலாகி தவிப்பாய்...அறிதலும் புரிதலுமாய் நம்முள் காதல்
...
உரையாடலால் உலா வரும் _ நம்குரல்கள் தென்றலாய் தேசமெங்கும்கதைப்பதற்கு அவசியமான செயல்கள்ஏதுமில்லை...ஆன போதும் கேட்பாரற்றுசலனமின்றி கிடக்கும் எனது இனியஅலைபேசியும் வருத்தத்தில் முழுவதுமாய்உனக்கும் எனக்கும் இடையிலானவெற்றிடத்தை சொல்லி விம்முகிறது....அறிதலும் புரிதலுமாய் நம்முள் காதல்உணர்வு பரிமாற்றங்கள் மென்மையாய்வரம்பு மீறா வார்த்தைகளுடன் _ உன்தெரிவிக்கமுடியாத ஏக்கத்தைநமக்குள் நடக்கும் ரகசிய யுத்தத்தில்சத்தமின்றி _ நீ _ இட்டுச் சென்றமுத்தமும் என்னுள் மொத்தமாய்....


0 comments

அவள் நினைவுகளோடு


ஆனந்த் கெ.ம


நான் இல்லாமல் மகிழ்ச்சியாக


வாழ முடியாது என்று


என்னிடம் சவால் விட்டு சென்றாள்


அவள் சொந்த ஊரிற்கு


நானும் இந்த நிமிடங்கள் வரை


...
முயற்ச்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன்


அவள் சவாலில் வெற்றி பெற


ஆனாலும் தோற்றுப்போகிறேன்


இந்த நிமிட ம் வரை


மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்


அவள் நினைவுகளோடு...
Friday, 14 October 2011 0 comments

கல்லூரி காதல்


கல்லூரி காதல்

கனவுகளோடு
கல்லூரிக்குள்
காலடி
எடுத்து
வைத்தேன் !!!!!

கனவுகள் சிதைந்தன !!
காரணம்

கன்னி பெண்களின்
காலடி சுவடுகள்
என்னை சுற்றி !!!

இத்துணை தடுமாற்றமா ???

சிரிப்பில் என்னை
கவர்ந்தாள்
கன்னி!!!

சிற்பமாய் மாற்றினால்
என்னை !!!
சில காலங்கள்
மட்டும் !!

சீரலிதால்
என் வாழ்வை
என் மூச்சின்
இறுதி வரை !!!
0 comments
Raajakumaran Shanmugam

அது...எது??! எப்போது


நிகழ்ந்திருக்கக்கூடும்


அந்தப் புள்ளியின்


தொடக்கம்?
... அப்பாவான


அவனிடமிருக்கும் போதா?
அம்மாவான


அவளிடமிருக்கும் போதா?
இல்லை


இருவரின்


சேர்க்கையின் போதா?
இந்தக் கேள்வி


பிறப்புக்கு முன்னுமிருந்தது


இறப்புக்குப் பின்னுமிருக்கிறது.
மறைக்கப் பட்டிருக்கும்


இந்த ரகசியம்


எப்போதேனும்


மனிதர்களுக்குத் தெரிந்துவிடின்


மனிதர் சூழ் பூமி


பைத்தியக்காரர்களின்


திறந்தவெளி விடுதி


ஆகிவிடும் என்பதாலேயே
படைக்கப் பட்டதன்


ரகசியக் கருவறையிலேயே


பாதுகாக்கப் பட்டு வருகிறது


காலாதீதப் பொக்கிஷமாய்....
.
0 comments

ஊசலாடும் கண்களுக்குள் - நீ

கணப்பொழுதினில் மனதினில்

வானமாய் ஒரு காதல்...

என் அந்தப்புரத்தினுள்

ஆதியின் அந்தமாய் நுழைந்தவனே...

என் புன்னகைக்குள் புதையலாய்

...
புதைந்த புதியவனே....


மேகத்தினுள் நுழைந்திருக்கும்

மழைநீராய் எனக்குள் நீ...!

ஆடும் காற்றுக்கு ஏற்ப

அசையும் இலையாய் - உன்

வழித்தடம் பார்த்து என் பாதமும்...!கீழே சிதறும் சருகுகளை

கூட்டிச் சேகரித்து

எரிப்பது போல் - உன்

நினைவுச் சிதறல்களை

சேகரிக்கத்தான் முடிகிறது!

எரிக்க ஒருபோதும்

எத்தணிக்கவில்லை!மரத்தைத் தாங்கும்

ஆணிவேராய் உனக்கான காதல்

எனைத் தாங்கியபடியே...இதயத்தினுள் பூத்துக் குலுங்கும்

என் காதல் செடியை

வெட்டி எடுத்து வேறோர் இடத்தில்

நட்டால், பட்டுப் போகுமே தவிர

மொட்டு கொடுத்து மெட்டுப் போடாது...காந்தத்தைத் தொடரும் இரும்பாய்

உனை தொடர்கின்றேன்

என்னைத் தவிர உன்னை யாராலும்

காதலிக்க முடியாது....என் விழிகள் விவரிக்கமுடியாத

காதலையா

என் வரிகள் விவரிக்கப் போகின்றன!!நான் எழுதும் காகிதங்கள்

ஒவ்வொன்றும் கவித்துவமாவது

உன் காதலின் தனித்துவத்தால்...ஊசலாடும் கடிகாரம் போல

ஊசலாடும் கண்களுக்குள் - நீ

பூசிவிட்ட மை கரைந்து

பேசும் மொழி அறியாயோ.....பிழைகளோடு பிறக்கும்

என் கவிதைகள் - உன்

வாசம் பட்டாவது

பிழைத்துப் போகட்டும்.....
0 comments

உன் விழிகள்ஆனந்த் கெ.ம


தொலைந்து போன

என் இதயத்தை

எங்கு தேடியும் கிடைக்கவில்லை

கடைசியாக

உன்னிடம் இருப்பதாக கூறியது

...
உன் விழிகள்...

அதனால் தான்

நான் நேரடியாகவே

உன்னிடம் கேட்கிறேன்

உண்மை தானே

என் இதயம் உன்னிடத்தில்

பத்திரமாக தானே உள்ளது…
0 comments

போட்டியா ?
*அன்புடன் - சுபாஷ் ஜீவன்*


ஓவியப் போட்டியா????

உன் திருவுருவ படத்தை

ஒரு தடவை அனுப்பு....!!!!

கோலப்போட்டியா ???

கொஞ்ச நேரம் நீ போய்

ஒய்யாரமாக இருந்து விடு ...!!!!எழுத்துப் போட்டியா ???

உன் கையெழுத்தை

கடதாசியில் அனுப்பு....!!!!கவிதைப்போட்டியா ??

நம் காதலை

கமுக்கமாய் அனுப்பி விடு ....!!!!

காதலின் எந்த ஒரு

போட்டிக்கும்

போட்டியில்லா விடை – நீ....!!!!

உன்னை போற்றி எழுத

வார்த்தை இன்றி

புலம்பித்திரியும்

பொடிப்பயல் - நான்....!!!!
0 comments

ஜனனமும் மரணமும்


பிரேம லதா

இருளில் நிலவொளி நேரம்
விண்ணில் விண்மீன்கள்
விசாலமாய் விரிந்திருக்க
இதயமோ சுருங்கிய நிலையில்

நெருஞ்சி முள்ளான படுக்கையில்
நெருப்பாய் எரிந்தபடியே...
நெஞ்சோரப் பாரம் நீங்காமல் நிற்க
கண்ணோர சோகம் கலந்தே தான் கரைய

நீ காதலினால் கசிந்துருகிய கவிதைகளை
கண்ணீர்க் கண்களோடு கடக்கின்றேன்
உன் திருவடி தேடியபடியே...
என் கவியடி கலங்கியபடியே...

உன் பார்வையின் ஒளியில் பிறக்கின்றேன்
உன் வார்த்தையின் ஒலியில் இறக்கின்றேன் -
அதனால்
உன்னால் மட்டுமே எனக்கு எப்போதும்
ஜனனமும் மரணமும் கொடுக்க முடியும்

என் மன வானில் பௌர்ணமியாய் நீ...
உன் நிலையற்ற அன்பில் தேய்பிறையாய் நான்..
நதியின் வேகமாய் உன் காதல் - அது
சதியின் வேகமாய் அழிந்த நிலையில்...

இளமைத் தோட்டத்தில் இனிமை காட்டினாய்
காதல்த் தோட்டத்தில் கல்லறையும் கட்டினாய்
பனித்திரை நிறைந்த உனது பாசத்தில் - உன்
முகத்திரை கிழிந்ததில் உறைகின்றேன்...!

அன்பே...
கடலுக்குள் இருக்கும் உயிருக்கும்
தாகம் இருக்கும் - உணராயோ??
உன் இயலாமைக்கு என் காதலை எரிக்காதே..!
என் பிறப்பே உனக்கானது மறுக்காதே..!

உன் நேசம் கிடைக்க - நான்
என் சுவாசம் இழப்பேன்....- நான்
மரித்துச் சென்றாலும் உனை
வருத்திச் செல்ல மாட்டேன்...
 
;