Wednesday, 12 October 2011 0 comments

பெண்மை





பெண்மை





ஆண் உயிரணு தன்னை





தன மடியேந்தி.





ஈரைந்து மாதம் உயிர் கருவினை தாங்கிடுவாள்.





விதை சீறிடும் போது





...
உயிர் வெளிவரும் நாளில்





தன் உயிரினை விடவும் துணிந்திடுவாள்.













வானம் தன் நீளத்தை மறந்து







ஒரு நொடி மண் தொட்டால்???







அட அதையும் தாங்கி





தாய் இன்னொரு உயிரை





இந்த உலகிற்கு அளிப்பாள்.











பெண்மை என்ன?





ஆண்மை என்ன? தன் இதயத்தில்





பொத்தி பொத்தி வளர்த்திடுவாள்.





மழலையில் தான் கண்டிராத பலதும்





தன் குழந்தைக்கு





அலங்கரித்து ரசித்திடுவாள்.















இரண்டேழு கடந்து -மகள்






பெண்மை பூப்படையும் நேரம்





இன்பத்தில் முகம் கண்ணீரால் நனைப்பாள்.





பிஞ்சு உடம்பு தாங்காது என்று





பார்த்து பார்த்து எல்லாம்





வாங்கி கொடுப்பாள்.











அவள் ஆசைப்பட்டு கேட்கும்





கல்வியும் கலையும்





கற்றிட வழி வகுப்பாள்.





மகள் சேலை கட்டும் அழகில்





தன்னை மறந்து சிலை போல் உறைந்திடுவாள்!





இருந்தாலும் தன் கண்





பட்டதென்று திருஷ்டி சுற்றி போடுவாள்.











மூவெட்டு வந்தவுடன்





முன்னூறு யோசனைகள் கடந்து





மகளுக்கு தாலி என்னும் வேலி கட்டிட





நினைப்பாள்.







நல்லா வரன் கிடைக்க -பற்பல






கோவிலுக்கு வேண்டுதல் வைப்பாள்.







திருமண அழைப்பிதழ் முதல்








பஞ்சு மெத்தை சங்கீதம் வரை






அறிவுரைகள் கூறி






நல் குடும்பம் நடத்த சொல்லிக் கொடுப்பாள்.








இங்ஙனம் பெண் பணிகள்




ஓய்வில்லாமல் செய்வதை பார்த்தால்





நாம் காணாத இறைவனும்,





நாம் தேடிடும் இறைவனும்






நம்மை தண்டிக்கும் இறைவனும்






பெண்மை என்னும் தாய்மை தான்







என்பதை உணர செய்வாள்.!










0 comments

எனக்குள் நீ








நடுநிசியில்




உறக்கமின்றித் தவிக்கும்



நான்.....



நெருப்பினில்



ஒளிந்திருக்கும் ஒளியாய்



...
எனக்குள் நீ.....



நொறுங்கிச் சிதறிய



கண்ணாடித் துண்டுகளாய்



உன் பிம்பங்கள் - என்



பார்வையெங்கும்...



மொழி பெயர்க்கப்படாத



வார்த்தைகள்



உனக்காய் காத்துக்கிடக்க



அர்த்தமற்ற மௌனங்கள்



ஆயிரம் உன்னிடமிருந்தும்



அமைதியாய் நான்....



எதிர்பார்ப்பின்றி கிடந்தாலும்



உன்



ஆத்மார்த்த அன்பை



எதிர்பார்த்து ஏங்கி



அச்சப்படவே செய்கிறேன்



நீ



உதிர்க்கும் வார்த்தைகளுக்காக!



காற்றைப் போல் எனைச்



சுற்றினாய்...



காற்றைப் போல்



கண்முன் காணாமலேயே



சுற்றுகின்றாய்...



கடவுளைப் போல் எனை



ஆதரித்தாய்



கடவுளைப் போல்



மௌனித்துச் சிரித்தே



மறைகின்றாய்...



உறவைப் போல்



உறவாடி



உயிர் காத்தாய்...



உறவைப் போல்



பகையாடி



பழி தீர்க்கின்றாய்...



இன்னும் என்னதான் செய்யக்



காத்திருக்கின்றாய்...??



எத்தனை துயர் உன்னால்



வந்தாலும்



கலங்காமல் காத்திருப்பேன்



உன் காதலுக்காக!



காரணம்



கலக்கத்தை தவிர்ப்பதை



கற்றுக்கொடுத்தவனும்



நீதானே....






0 comments

முற்றுப்புள்ளி






உன்னை பொறுத்தவரை



உனக்கது பொழுதுபோக்கு



எனக்கு



அதுதான் வாழ்க்கை



நீதான் என்றாகிய பின்



...
நீயே நினைத்தாலும்



என் மனதை மாற்ற இயலாது



இனியும்



உன் நாடகத்தை



தொடராமல்



முற்றுப்புள்ளி




வைத்துவிட்டு சென்றுவிடு



சொற்ப உயிராவது



மிஞ்சட்டும்





0 comments

அன்னை







அன்னை



அன்பின் வடிவே – உன்



அகத்தில் பாச ஊற்றோ?



நெஞ்சம் நிறை இன்பம் தந்து



நெகிழ வைப்பாய் நீயே



...




உறவென்ற வலைக்குள் - எனை



உதிப்பித்தவள் நீயே



உயிர் உருவமாய் கண்டுகொண்டேன்



உண்மைத் தெய்வமாய் உனையே







வான நிலாக்காட்டி சோறு ஊட்டி



வாழ்வில் வழி காட்டி



துணை நின்று என்னோடு



துன்பம் விலக துணை புரிவாய்







எக் காரியம் தொடங்க முதல்



என் அன்னையே உனை தொழுதால்



முன்னின்று காரியத்தில்



முழுதாய் வெற்றி தந்திடுவாய்







பாசத்தின் உறைவிடமே



பணிகிறேன் உனையே



தருவாய் உன்



தரமிகு ஆசீர்வாதத்தை


















 
;