Friday, 7 October 2011 0 comments

நட்பு


மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளைஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

இன்பத்தில் மகிழ்ந்திட நட்பு,
துன்பத்தில் பகிர்ந்துகொள்ள நட்பு,
தயக்கத்தில் கைகொடுக்க நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

புகழ் எதிர்பார்க்காதது நட்பு,
சுயநலம் தெரியாதது நட்பு,
தலைக்கனம் இல்லாதது நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

குழந்தையில் விளையாடிட நட்பு,
இளமையில் குறும்புகள் செய்திட நட்பு,
முதுமையில் கலந்துரையாடிட நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

உனக்கு உறவாக வாழ்வது நட்பு,
உனக்கு வழிகாட்டியாக இருப்பது நட்பு,
உனக்கு உருதுணையாக நிற்பது நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

உன்னை மனிதனாக்குவதும் நட்பு,
உன்னை உணரவைப்பதும் நட்பு,
உன்னை உயர்த்துவதும் நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு,
தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு,
குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு

உன் நண்பர்களை புரிந்துகொள்,
நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள்,
துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம்,
நட்பு மூலமாக...
0 comments

கண்கள் கொண்டு கட்டுகிறாய்....!!!!


**அன்புடன் - சுபாஷ் ஜீவன்**


உன் விழி வீச்சின்

வேகத்தாலே....!!!!

என் தாய் மொழியில்

பேசுவதுக்கும் தடுமாறுகிறேன் அன்பே....!!!!

கயிறு கொண்டு

கட்டாமல் - எனை

கண்கள் கொண்டு

கட்டுகிறாய்....!!!!சின்ன சின்னதாய்

மீட்டெடுத்து எனை....!!!!

மொத்தமாக தொலைக்க வைக்கிறாய்....!!!!சில்மிஷம்....!!!!

ஏதும் செய்யாமல் எனை

சிணுங்கி சிணுங்கி

சிதறடிக்கிறாய்....!!!!

தேன் பாற் தெள்ளமுதின்

இனிமையெல்லாம்...!!!

உன் தெற்றுப்பல்

சிரிப்பினில் சுவைக்க வைக்கிறாய்....!!!!

நானோ தினம் தினம்

உனை நினைத்து....!!!!

ஏங்கித்தான் போகிறேன்

என்னுயிரே....!!!!

0 comments

தமிழனென்று தலை நிமிரடாதனசேகரன் ஜேயராமன்..தமிழனென்று தலை நிமிரடா....!!


பொன் மொழிகள்


பல சொல்லி


பழமொழிகள்


பல கேட்டு


...


தமிழ் மொழியின்

மேன்மை சொல்லதருணம் எம்மை சேர்ந்தபோதுபிறமொழியில்

மோகம் கொண்டுநாகரீகம்எனச்சொல்லி

நம்மினம் பட்டதுன்பம்நாம் மறந்து

நா தட்டுத்தடுமாறிஇன்று பேசியது தமிழ் மொழியாம்

எம் மொழியைமேலை நாடவரின்

மொழியில் பிழையின்றி

தாய் மொழியைகீழ் மொழியாம் என்றுரைத்து.......தலைக்கனம்கொண்டு...பாரதியும்

கம்பனும்

வள்ளுவரும்

இனியாளும்

காந்தி தாத்தா

நாவலரும்

தமிழிற்காய்பாடுபட்டு வாழ்ந்தவர்கள்

பார் போற்றும் இவர்களைப்போல்நீ வாழவேண்டாம்

சாதாரண தமிழ் மகனாயேனும்

தமிழ் வளர்த்தால் போதும்புரிந்து நீ

கொன்றிடாதே தமிழைஇனியேனும்

தமிழ் தளைத்திடட்டும்

கலப்புகளும் சலனங்களும்

இன்றி......தமிழனென்று தலை நிமிர்ந்து

தைரியமாய் நீ நின்று.......!!!!0 comments

உதட்டு சாயம்ஆனந்த் கெ.ம


உன்னை யாரடி
உதட்டு சாயத்தையெல்லாம் வானிற்கு
கடனாய் கொடுக்க சொன்னது
மாலை நேரத்தில் வானத்தை பார்
உலகமே வியக்கும் அளவிற்கு
... பூசிக்கொண்டு என்னை பார்த்து
ஏளனம் செய்கிறது
தினம் தினம்....பச்சை வண்ணமாக இருந்த
மருதாணி இலை கூட
உன் கையை தீண்டியாதால் என்னவோ
வெட்டப்பட்டு தன்முகம் சிவந்து
இளஞ்சிவப்பாக மாறியதோ.............
0 comments

மாய விழிகள்

உன் மாய விழிகளின் மந்திரத்தால்
கட்டுண்டு


கிடக்கும் சாமான்யன் நான்
... உன் மயக்கும்


சிரிப்பில்


பூக்களும் தலைகவிழ்கின்றன


தோல்வியை ஒத்துக்கொண்டு


என் இதயமும் சங்கமம்


ஆனது உன்னிடம்உன் சிருங்கார நடையில்


அம்மனைப் போட்டிக்கு அழைக்கிறாய்


வெற்றிபெறுவது என்னவோ


நீயாகத்தான் இருப்பாய்உன்னை வர்ணிக்க


வார்த்தைகள் இல்லையடி -என்


நினைவுப் பெட்டகத்தினுள்


உதவிக்கு கம்பனை அழைக்கிறேன்
உன் கொடி இடையில்


என்னை கிறங்கவைத்து மயங்கவைத்து


கடமைகளை மறக்க செய்தாய்
ஒரு சராசரி ஆணடி நான்


இன்னும் எத்தனை எத்தனை


மாயாஜாலங்கள் உனக்குள்ளே
மூழ்கி முக்குளிக்க


நான் என்றைக்கோ தயார் -நீ ???
0 comments

மீண்டும் உயிர்த்தெழுகின்றேன்....வசந்தமற்ற வாழ்க்கையில்

வசந்தமாய் வந்தவனே!

உன் நேசத்தினால், செத்தவள்

மீண்டும் உயிர்த்தெழுகின்றேன்.......
சுற்றங்கள் எனை சூழ்ந்திருந்தாலும் - அவை

மற்றவையாகத் தான் தெரிகின்றன!

சுற்றமே நீதான் என நெஞ்சமும்

சுகப்பட்டு சொல்கின்றது...
அடியார்க்குப் பணியாத

எனது உள்ளமும் - உன்

பார்வைக்குப் பணிந்து

கிடப்பது எப்படி?வாழ்ந்தேனே கனவின்றி முந்நாள்....

வந்தாயே கனவாக இந்நாள்....

குளிர்ந்தேனே இரவோடு சுகமாய்....

இணைந்தேனே உறவோடு உயிராய்....எந்நாளும் மாறாது

என் எண்ணம் - யார்

சொன்னாலும் போகாது

உன் வண்ணம்...யாரோடு நீ கொஞ்சிப்

போனாலும்

பாரோடு உன் வழியில்

பயணிப்பேன்...நிஜம் வேண்டாமென்று

நீ தள்ளிச் சென்றாலும்

நிழலாய் உன் பெயர் சொல்லி

உன்னவள் நானே - என்று

உரக்கக் கூவுவேன்...ஒப்பில்லா மன்னவனே!

உப்பில்லா உணவும்

உன் கரம் பட்டால் சுவையாகும்!

பண்புள்ள இந்த பாவையும்

உன் பக்கத்தில் வந்தால்

பாக்கியமாகும்!
 
;