Monday 17 October 2011

என்னவளே


ஆனந்த் கெ,ம



என்னவளே என்னிடம்



ஒரு கவிதை சொல்ல சொன்னாள்



நானோ எதைப்பற்றி கூற என்றேன்



அவளை பற்றியே கூறு என்றாள்



நானோ கவிதையை கூறமுடியாது



எழுதுகிறேன் என்றேன் சரி என்றாள்


என் பேனா கவிபாட ஆரம்பித்தது இப்படி


பேசும் கவிதை உனது விழிகள்


சிக்கலான கவிதை உனது கூந்தல்


அபாய கவிதை உனது புருவம்


மௌனமான கவிதை உனது புன்னகை


ஆச்சரிய கவிதை உனது சிரிப்பு


அசைந்தாடும் கவிதை உனது காதணி


கூர்மையான கவிதை உனது மூக்கு


அடுக்கி வைத்த கவிதை உனது பற்கள்


நட்சத்திர கவிதை உனது முகபரு


நிலம் தீண்டும் கவிதை உனது பாதம்


இசைபாடும் கவிதை உனது கொழசு


எழுதி முடிப்பதற்கு முன்பே


பரித்துக்கொண்டாள்


இன்னும் முடிக்கவில்லை என்றேன்


அதை காதில் வாங்காமலே


படித்து முடித்த பிறகு


சிரித்துக்கொண்டே கூறினாள்


கடைசிவரியை அவள் கூற


எனை எழுத சொல்லி


உன் காதல்


ஒரு ஆச்சரியமான கவிதை என்று


அப்போது தான் அறிந்து கொண்டேன்


ஒரு கவிதைக்ககு கூட


கவிதை எழுத தெரியும் என்று…



No comments:

Post a Comment

 
;