Friday, 14 October 2011
Raajakumaran Shanmugam

அது...எது??! எப்போது


நிகழ்ந்திருக்கக்கூடும்


அந்தப் புள்ளியின்


தொடக்கம்?




... அப்பாவான


அவனிடமிருக்கும் போதா?




அம்மாவான


அவளிடமிருக்கும் போதா?




இல்லை


இருவரின்


சேர்க்கையின் போதா?




இந்தக் கேள்வி


பிறப்புக்கு முன்னுமிருந்தது


இறப்புக்குப் பின்னுமிருக்கிறது.




மறைக்கப் பட்டிருக்கும்


இந்த ரகசியம்


எப்போதேனும்


மனிதர்களுக்குத் தெரிந்துவிடின்


மனிதர் சூழ் பூமி


பைத்தியக்காரர்களின்


திறந்தவெளி விடுதி


ஆகிவிடும் என்பதாலேயே




படைக்கப் பட்டதன்


ரகசியக் கருவறையிலேயே


பாதுகாக்கப் பட்டு வருகிறது


காலாதீதப் பொக்கிஷமாய்....
.

No comments:

Post a Comment

 
;