Friday 14 October 2011 0 comments

கல்லூரி காதல்


கல்லூரி காதல்

கனவுகளோடு
கல்லூரிக்குள்
காலடி
எடுத்து
வைத்தேன் !!!!!

கனவுகள் சிதைந்தன !!
காரணம்

கன்னி பெண்களின்
காலடி சுவடுகள்
என்னை சுற்றி !!!

இத்துணை தடுமாற்றமா ???

சிரிப்பில் என்னை
கவர்ந்தாள்
கன்னி!!!

சிற்பமாய் மாற்றினால்
என்னை !!!
சில காலங்கள்
மட்டும் !!

சீரலிதால்
என் வாழ்வை
என் மூச்சின்
இறுதி வரை !!!
0 comments
Raajakumaran Shanmugam

அது...எது??! எப்போது


நிகழ்ந்திருக்கக்கூடும்


அந்தப் புள்ளியின்


தொடக்கம்?




... அப்பாவான


அவனிடமிருக்கும் போதா?




அம்மாவான


அவளிடமிருக்கும் போதா?




இல்லை


இருவரின்


சேர்க்கையின் போதா?




இந்தக் கேள்வி


பிறப்புக்கு முன்னுமிருந்தது


இறப்புக்குப் பின்னுமிருக்கிறது.




மறைக்கப் பட்டிருக்கும்


இந்த ரகசியம்


எப்போதேனும்


மனிதர்களுக்குத் தெரிந்துவிடின்


மனிதர் சூழ் பூமி


பைத்தியக்காரர்களின்


திறந்தவெளி விடுதி


ஆகிவிடும் என்பதாலேயே




படைக்கப் பட்டதன்


ரகசியக் கருவறையிலேயே


பாதுகாக்கப் பட்டு வருகிறது


காலாதீதப் பொக்கிஷமாய்....
.
0 comments

ஊசலாடும் கண்களுக்குள் - நீ

கணப்பொழுதினில் மனதினில்

வானமாய் ஒரு காதல்...

என் அந்தப்புரத்தினுள்

ஆதியின் அந்தமாய் நுழைந்தவனே...

என் புன்னகைக்குள் புதையலாய்

...
புதைந்த புதியவனே....










மேகத்தினுள் நுழைந்திருக்கும்

மழைநீராய் எனக்குள் நீ...!

ஆடும் காற்றுக்கு ஏற்ப

அசையும் இலையாய் - உன்

வழித்தடம் பார்த்து என் பாதமும்...!



கீழே சிதறும் சருகுகளை

கூட்டிச் சேகரித்து

எரிப்பது போல் - உன்

நினைவுச் சிதறல்களை

சேகரிக்கத்தான் முடிகிறது!

எரிக்க ஒருபோதும்

எத்தணிக்கவில்லை!



மரத்தைத் தாங்கும்

ஆணிவேராய் உனக்கான காதல்

எனைத் தாங்கியபடியே...



இதயத்தினுள் பூத்துக் குலுங்கும்

என் காதல் செடியை

வெட்டி எடுத்து வேறோர் இடத்தில்

நட்டால், பட்டுப் போகுமே தவிர

மொட்டு கொடுத்து மெட்டுப் போடாது...



காந்தத்தைத் தொடரும் இரும்பாய்

உனை தொடர்கின்றேன்

என்னைத் தவிர உன்னை யாராலும்

காதலிக்க முடியாது....



என் விழிகள் விவரிக்கமுடியாத

காதலையா

என் வரிகள் விவரிக்கப் போகின்றன!!



நான் எழுதும் காகிதங்கள்

ஒவ்வொன்றும் கவித்துவமாவது

உன் காதலின் தனித்துவத்தால்...



ஊசலாடும் கடிகாரம் போல

ஊசலாடும் கண்களுக்குள் - நீ

பூசிவிட்ட மை கரைந்து

பேசும் மொழி அறியாயோ.....



பிழைகளோடு பிறக்கும்

என் கவிதைகள் - உன்

வாசம் பட்டாவது

பிழைத்துப் போகட்டும்.....
0 comments

உன் விழிகள்



ஆனந்த் கெ.ம






தொலைந்து போன

என் இதயத்தை

எங்கு தேடியும் கிடைக்கவில்லை

கடைசியாக

உன்னிடம் இருப்பதாக கூறியது

...
உன் விழிகள்...

அதனால் தான்

நான் நேரடியாகவே

உன்னிடம் கேட்கிறேன்

உண்மை தானே

என் இதயம் உன்னிடத்தில்

பத்திரமாக தானே உள்ளது…
0 comments

போட்டியா ?
















*அன்புடன் - சுபாஷ் ஜீவன்*


ஓவியப் போட்டியா????

உன் திருவுருவ படத்தை

ஒரு தடவை அனுப்பு....!!!!

கோலப்போட்டியா ???

கொஞ்ச நேரம் நீ போய்

ஒய்யாரமாக இருந்து விடு ...!!!!



எழுத்துப் போட்டியா ???

உன் கையெழுத்தை

கடதாசியில் அனுப்பு....!!!!



கவிதைப்போட்டியா ??

நம் காதலை

கமுக்கமாய் அனுப்பி விடு ....!!!!





காதலின் எந்த ஒரு

போட்டிக்கும்

போட்டியில்லா விடை – நீ....!!!!

உன்னை போற்றி எழுத

வார்த்தை இன்றி

புலம்பித்திரியும்

பொடிப்பயல் - நான்....!!!!
0 comments

ஜனனமும் மரணமும்


பிரேம லதா

இருளில் நிலவொளி நேரம்
விண்ணில் விண்மீன்கள்
விசாலமாய் விரிந்திருக்க
இதயமோ சுருங்கிய நிலையில்

நெருஞ்சி முள்ளான படுக்கையில்
நெருப்பாய் எரிந்தபடியே...
நெஞ்சோரப் பாரம் நீங்காமல் நிற்க
கண்ணோர சோகம் கலந்தே தான் கரைய

நீ காதலினால் கசிந்துருகிய கவிதைகளை
கண்ணீர்க் கண்களோடு கடக்கின்றேன்
உன் திருவடி தேடியபடியே...
என் கவியடி கலங்கியபடியே...

உன் பார்வையின் ஒளியில் பிறக்கின்றேன்
உன் வார்த்தையின் ஒலியில் இறக்கின்றேன் -
அதனால்
உன்னால் மட்டுமே எனக்கு எப்போதும்
ஜனனமும் மரணமும் கொடுக்க முடியும்

என் மன வானில் பௌர்ணமியாய் நீ...
உன் நிலையற்ற அன்பில் தேய்பிறையாய் நான்..
நதியின் வேகமாய் உன் காதல் - அது
சதியின் வேகமாய் அழிந்த நிலையில்...

இளமைத் தோட்டத்தில் இனிமை காட்டினாய்
காதல்த் தோட்டத்தில் கல்லறையும் கட்டினாய்
பனித்திரை நிறைந்த உனது பாசத்தில் - உன்
முகத்திரை கிழிந்ததில் உறைகின்றேன்...!

அன்பே...
கடலுக்குள் இருக்கும் உயிருக்கும்
தாகம் இருக்கும் - உணராயோ??
உன் இயலாமைக்கு என் காதலை எரிக்காதே..!
என் பிறப்பே உனக்கானது மறுக்காதே..!

உன் நேசம் கிடைக்க - நான்
என் சுவாசம் இழப்பேன்....- நான்
மரித்துச் சென்றாலும் உனை
வருத்திச் செல்ல மாட்டேன்...
 
;