Wednesday 12 October 2011

பெண்மை





பெண்மை





ஆண் உயிரணு தன்னை





தன மடியேந்தி.





ஈரைந்து மாதம் உயிர் கருவினை தாங்கிடுவாள்.





விதை சீறிடும் போது





...
உயிர் வெளிவரும் நாளில்





தன் உயிரினை விடவும் துணிந்திடுவாள்.













வானம் தன் நீளத்தை மறந்து







ஒரு நொடி மண் தொட்டால்???







அட அதையும் தாங்கி





தாய் இன்னொரு உயிரை





இந்த உலகிற்கு அளிப்பாள்.











பெண்மை என்ன?





ஆண்மை என்ன? தன் இதயத்தில்





பொத்தி பொத்தி வளர்த்திடுவாள்.





மழலையில் தான் கண்டிராத பலதும்





தன் குழந்தைக்கு





அலங்கரித்து ரசித்திடுவாள்.















இரண்டேழு கடந்து -மகள்






பெண்மை பூப்படையும் நேரம்





இன்பத்தில் முகம் கண்ணீரால் நனைப்பாள்.





பிஞ்சு உடம்பு தாங்காது என்று





பார்த்து பார்த்து எல்லாம்





வாங்கி கொடுப்பாள்.











அவள் ஆசைப்பட்டு கேட்கும்





கல்வியும் கலையும்





கற்றிட வழி வகுப்பாள்.





மகள் சேலை கட்டும் அழகில்





தன்னை மறந்து சிலை போல் உறைந்திடுவாள்!





இருந்தாலும் தன் கண்





பட்டதென்று திருஷ்டி சுற்றி போடுவாள்.











மூவெட்டு வந்தவுடன்





முன்னூறு யோசனைகள் கடந்து





மகளுக்கு தாலி என்னும் வேலி கட்டிட





நினைப்பாள்.







நல்லா வரன் கிடைக்க -பற்பல






கோவிலுக்கு வேண்டுதல் வைப்பாள்.







திருமண அழைப்பிதழ் முதல்








பஞ்சு மெத்தை சங்கீதம் வரை






அறிவுரைகள் கூறி






நல் குடும்பம் நடத்த சொல்லிக் கொடுப்பாள்.








இங்ஙனம் பெண் பணிகள்




ஓய்வில்லாமல் செய்வதை பார்த்தால்





நாம் காணாத இறைவனும்,





நாம் தேடிடும் இறைவனும்






நம்மை தண்டிக்கும் இறைவனும்






பெண்மை என்னும் தாய்மை தான்







என்பதை உணர செய்வாள்.!










No comments:

Post a Comment

 
;