Wednesday 19 October 2011 0 comments

நீ என்னோடு


ஆனந்த் கெ.ம




நீ வருகிறாய் என்று


என்னை ஏமாற்றிய நாட்களில்


ஏமாந்து போனது


நான் மட்டும் அல்ல


இந்த கடற்கறையில்


...
நீ என்னோடு


நடைபயிலும் நேரங்களில்


நமக்கு தெரியாமல்


உந்தன் பாதசுவடுகளை


திருடி செல்லும்


அலைகளும் கூட…



0 comments

என் விழி எதிரே....



கவிஞர் கவிதாசன்



மான் விழி..!மயங்கினேன் அந்த




மலர் விழியை கண்டு...




விழி மூடாமல் விழித்திருந்தேன்




அந்த வேல்விழியை காண..




அவள் விழிகளை கண்டு




...
விழி மூடிக்கொள்ளிறது சூரியன்...



என் விழிகளுக்கும் விருந்து தரும்



வெண்ணிலவு இப்போ பகலிலும்



என் விழி எதிரே....



எனை வருவிடச் செல்லும்



வாடைக்காற்றாகவும்



எனை சுற்றி சுழன்று வரும் சுழல் காற்றும்



எனை சுவாசிக்கக வைக்கும்



தென்றல் காற்றும் நீயாகி நீயாகி



வள்ளியே வள்ளி உன் கூந்தலில்இருக்கும்



மல்லிகைப் பூவை



வருடி தடவிட வா வா உன் மவுன மொழியால்



அழைத்து விடும் இளைய நிலவே





0 comments

என் ஜீவனே....


பிரேம லதா




என் ஜீவனே....





அள்ளி வீசிய உன் அன்பில்


புண்ணான நெஞ்சமும் பூவானது

...


கல் அடிபட்ட குளமாய்

இறந்தகால நினைவலைகள்



இன்று



உன் இரத்தின சொல்லால்

தெளிந்த நீரோடையாய்

நெகிழ்ச்சியான நிகழ்வுகள்



உன் காதலின் தாக்கத்தால்

மேனியெங்கும் ஆயிரம் மின்னல்கள்



உன் அலைபேசியின் சத்தத்தால்

இதயமெங்கும் ஆலயமணியின் ஓசைகள்



உன் பரிவான பார்வையால்

மூங்கில் ஒன்று நாணலானது



உன் வருகையால் இனமறியா பெண்மை

முகமறியாமல் மயங்கி நின்றது



உன் கனவில் நான் இல்லையென்றால்

தொலைந்து போகும் எனது தூய இரவு



உன் மொழியில் நான் இல்லையென்றால்

இறந்து போகுமே எனது உறவு ...



அன்பே...



இசை இல்லையென்றால் சங்கீதம் சிறப்பதில்லை

நீ இல்லையென்றால் நானும் சிரிப்பதில்லை



ஊணும் உயிரும் உருகி உனக்காகவே

விளக்கேற்றி விடியும்வரை விழித்திருப்பேன்



உன் கோயிலின் ரதமாக இருப்பேனன்றி

வீதியில் இறங்க மாட்டேன்...
0 comments

உன் உயிர்!! பூ!!

கவிஞர் கவிதாசன்


வெண்ணிலவே வானத்தில் ஒட்டிய



வெண்ணிலவே



செவ் வானத்தை கட்டித்தழுவி



தேயாமல் காயாமல் களிப்போடு



அசைவது !!போலும்



...
அன்பே உன்னைத் நான் தழுவிடும்போது


உன் உயிர்!! பூ!!


உனக்குள் மலர்ந்திடுதே மலர்ந்திடுதே


எனக்காகவே உனில் தான் மலர்ந்திடுதே


!!!!!!!!!!!!! !!
 
;