

அன்பு முகிலன்
அன்பே !!
நீ தனிமையில் இருந்து எழுதும் காதல் கவிதைக்கு
அடி எடுத்துக் கொடுக்கும் அருவிகளும்
இசை மிட்டும் குருவிகளும் மரங்களும்
உன் கவி கேட்டு புன்னகைக்கும் பூக்களும்
........உன்னை சுற்றி இருக்கும் பொது
நீ என் புன்னைகைத்து இருக்கிறாய் அன்பே !!!!!!!!!!

காகிதத்தில்
கப்பல் செய்து
கானல் நீரில்
...
பயணம் செய்வோம் வா என்று
நீ அழைக்கும் போதெல்லாம்
பொய் என்று தெரிந்தும்
வரத்துடிக்கிறது மனது
உன் பொய்களையே நான்
இப்படி நேசித்தால்
உன்மீது கொண்ட காதலை
நான் எப்படி சொல்லுவது ???
போகும் போது
என்னை கொண்டு செல்
இல்லை
கொன்று செல்
நீ இன்றி ஒரு வாழ்வு
நிச்சயமாய் எனக்கு வேண்டாம் ..
- சுபாஷ் ஜீவன் -
நீ போட்ட கோலத்தை விட
உன் கண்கள் போட்ட கோலம் அழகு....
மாவினால் போட்ட கோலத்தை விட
மாலைகளால் சூடிய உன் மணக்கோல
மிக அழகு.....................
நெடுந்தீவு அகிலன்
ஆனந்த் கெ.ம
வரங்களே சாபங்கள் என்றால்
இங்கு வரங்கள் எதற்கு?
தோல்விகளே தொடர்கள் என்றால்
இங்கு வெற்றிகள் எதற்கு?
உதிர்வதற்கு பூக்கள் என்றால்
... இங்கு வசந்தம் எதற்கு?
முற்றுபுள்ளிகள் முடிவு என்றால்
இங்கு தொடர்கதைகள் எதற்கு?
சோகங்களே தொடர்ச்சி என்றால்
இங்கு மகிழ்ச்சி எதற்கு?
ஓவியங்கள் மட்டுமே அழகு என்றால்
இங்கு காட்சிகள் எதற்கு?
காசுக்கு மட்டுமே மதிப்பு என்றால்
இங்கு பந்தங்கள் எதற்கு?
உறக்கம் மட்டுமே வாழ்க்கை என்றால்
இங்கு லட்சியங்கள் எதற்கு?
மனிதா
பிறப்பை இறப்பாக்கி பார்க்காமல்
ஒவ்வொரு இறப்பையும் பிறப்பாக்கினால்
வாழ்விலும் தாழ்விலும் வீழ்ச்சிகளே இல்லை…
Subscribe to:
Comments (Atom)



- Follow Us on Twitter!
- "Join Us on Facebook!
- RSS
Contact