

தேய்பிறை என்று
தேம்பி அழுகின்ற
கருப்பு நிலவு...
இரு பக்கம் காட்டும்
நாணயம் போல
தேய்பிறையில் உண்மை...
ஆளுக்காள் புகழ்வார்கள்
அதனாயுள் அற்பமே
தேய்பிறையின் போது...
தேய்பிறையாயினும் தோன்றும்
கண்ணில் தெரிந்தாலும்
கண்டுக்கொள்ளப்படாது நிலவு...
யதார்த்தம் உறைக்கும்
பெளர்ணமி நிரந்தரமல்ல
தேய்பிறையில் புரியும்...
நிலாச்சோறு மறந்து
குமிழ் விளக்கு
வெளிச்சத்தில் மெய்மறந்து...
ஆளாளுக்கு அவரவர்
விருப்ப விளக்குகளை
நிலவுக்கு மாற்றாக்கி..
பூமிக்கும் நிலவுக்குமான
உறவில் விரிசல்
தேய்பிறையின் போது...
விரிசல் அல்லவது
உண்மை காட்டும்
உலக கண்ணாடியது...
தேய்கிறது நிலவு
தேயட்டும் அது
தேய்வது இயற்கை...
தேய்பிறையில் தேடிவரும்
விலை மதிப்பில்லா
வாழ்க்கை பாடங்கள்...

கவிஞர் கவிதாசன்
தேங்கி அழுதிடும் தேயாத வானம்
பொழி ஓயாத ஆடை மழையை
அதை தாங்கி தன் உளம் தேங்கி தேங்கிஅழுது
மனக் கண்ணீர் வடிக்கும்
மண்ணின் பெருமை காக்கும் பூமியைப் போல்
பெண்ணே என் உள்ளம் ஏங்கி ஏங்கி ஊமையாகி
தாங்கமுடியாமல் என் உயிரே போகுமுன்னே
அல்லும் பகலும் என் அன்பைச் சுமந்து
நீ மலர்ந்திடவே
என் உயிரில் கல்ர்ந்து என் ஊணோடு கலர்ந்துவிடு
என் அன்போடு நிறைந்து கண்ணுக்குள்
கரைந்துவிடு
Subscribe to:
Comments (Atom)


- Follow Us on Twitter!
- "Join Us on Facebook!
- RSS
Contact