Saturday, 15 October 2011

ஜாக்கிரதை நண்பர்களே


ஆனந்த் கெ.ம



நிஜ வாழ்க்கையில் கூட வேஷம் போடும் நபர்கள்

இதோ இன்றும்

மீண்டும் வேடமேற்று நடிக்க தயாராகிவிட்டார்கள்

அதனால் ஜாக்கிரதை நண்பர்களே



அவர்ளின் இப்போதைய புன்னகை


...
எப்போதுமே மர்ம புன்னகை தான்

அதனால் ஜாக்கிரதை நண்பர்களே



இத்தனைகாலம் தொலைந்து போன சொந்தங்களை


எல்லாம்


இன்று மட்டும் நினைவில் வைத்து நாளையே மறந்து


விடும்

ஞாபக மறதி அதிகம் கொண்டவர்கள்

அதனால் ஜாக்கிரதை நண்பர்களே



இன்று எல்லோரும் தர்ம பிரபுக்கள் தான்

நாளையே அவர்கள் உங்களின் பாக்கெட்டில் உள்ள

பணத்தினை மட்டும் உறிஞ்சும் அட்டை பூச்சிக்கள்

அதனால் ஜாக்கிரதை நண்பர்களே



இன்று உங்கள் காலினை பிடிப்பவர்கள்

நாளை உங்களை அவர்களது காலில் விழ வைக்க

நன்று அறிந்தவர்கள்

அதனால் ஜாக்கிரதை நண்பர்களே….



சிநதியுங்கள் தோழர்களே

நீங்கள் அழுத்த போகிறீர்களோ இல்லை குத்த

போகிறீர்களோ

சிந்தியுங்க ள் அது அவர்களின் தலையெழுத்து

மட்டுமல்ல

உங்களுடையதும் கூட

அதனால் ஜாக்கிரதை நண்பர்களே…

No comments:

Post a Comment

 
;