Tuesday, 11 October 2011




சிட்டுக்குருவியாய்



எனைச் சுற்றிய இதயம்



எனை விடுத்து பிரிவை



நேசித்துப் பயணிப்பதால்



கொட்டும் அருவியாய்



...
கண்கள் காட்சிதருகின்றன!







அடிக்கொரு சோகம்



அளவில்லாமல் அலையாய்



எனை இழுத்துச் செல்வதால்



நொடிக்கொரு யாகம்



நோவில்லாமல் சிலையாய்



இதயம் தவமிருக்கின்றது!







கற்பனைக் கடலில் முத்தெடுத்து



கவிதையாய் தொடுத்தளித்தேன்



அற்பமாய் அதைத் தவிர்த்து



புதியதாய் ஓர் கதை சொல்கின்றாய்



பூச்சரமாய் தொடுத்தவளின் சொற்கள்



பாச்சரமிழந்து பயனற்றுக் கிடக்கிறது







ஆண்டவன் நீயென ஆனபின் - எனை



ஆள்பவன் வேறு தேவையில்லை...



வேண்டுதல் எல்லாம் உனைநோக்கியே



வேறெதுவும் வேண்டியதில்லை...



நின்னையே எண்ணி நீ மட்டும்



வேண்டுமென உன்னையே எதிர்நோக்கி....











No comments:

Post a Comment

 
;