Monday, 10 October 2011

வன்புணர்வு














வேலுச் சாமி


ஆரறிவென்று
அரட்டும்
ஆண்மிருகத்தின்
அகோர வெளிப்பாடு ...

உயிர்போகாமல்
உடலோடு
உள்ளம் சிதைத்த
உயிர்க் கொலை...

சிற்றின்பச்
சொறிநாய்களின்
சிறுவேட்கை தணிக்க
சிதைத்த பேரழிவு...

கத்திமுனைகள்
கணக்கற்றதில்
குத்திக்கிழித்த
கோடூர நிகழ்வு...

மலர்ரும்பை
மலைகொண்டு
மடிய வைத்தத
மரணக்கோலம்...

இத்தனையும் செய்துவிட்டு
உத்தமனாக உலாவரும்
உயிர் திண்ணும்
உயிரில்லா மனிதமிருகமே...

ஆரறிவில் உயர்வென்கிறாய்
அனைத்திலும் மேலென்கிறாய்
அகிலத்தின் அனைத்தையும்
ஆளும் பிறப்பென்கிறாய்...

பிந்தியஅறிவு
எந்த மிருகம்
செய்கிறது
வன்புணர்வு....

ஈன்றவரும் - நீ
ஈன்றவரும் காரிஉமிழ்வர்
சிந்திக்க மறுத்தால்
நிந்திக்கும் வேளையுண்டு மறவாதே...!!!

No comments:

Post a Comment

 
;