Wednesday 19 October 2011

என் ஜீவனே....


பிரேம லதா




என் ஜீவனே....





அள்ளி வீசிய உன் அன்பில்


புண்ணான நெஞ்சமும் பூவானது

...


கல் அடிபட்ட குளமாய்

இறந்தகால நினைவலைகள்



இன்று



உன் இரத்தின சொல்லால்

தெளிந்த நீரோடையாய்

நெகிழ்ச்சியான நிகழ்வுகள்



உன் காதலின் தாக்கத்தால்

மேனியெங்கும் ஆயிரம் மின்னல்கள்



உன் அலைபேசியின் சத்தத்தால்

இதயமெங்கும் ஆலயமணியின் ஓசைகள்



உன் பரிவான பார்வையால்

மூங்கில் ஒன்று நாணலானது



உன் வருகையால் இனமறியா பெண்மை

முகமறியாமல் மயங்கி நின்றது



உன் கனவில் நான் இல்லையென்றால்

தொலைந்து போகும் எனது தூய இரவு



உன் மொழியில் நான் இல்லையென்றால்

இறந்து போகுமே எனது உறவு ...



அன்பே...



இசை இல்லையென்றால் சங்கீதம் சிறப்பதில்லை

நீ இல்லையென்றால் நானும் சிரிப்பதில்லை



ஊணும் உயிரும் உருகி உனக்காகவே

விளக்கேற்றி விடியும்வரை விழித்திருப்பேன்



உன் கோயிலின் ரதமாக இருப்பேனன்றி

வீதியில் இறங்க மாட்டேன்...

No comments:

Post a Comment

 
;